மின்வெட்டு தான் தலைப்பு,
சொல்லி முடித்தார் நடுவர்,
யாருக்கும் கேட்கவில்லை,
அரங்கில் மின்வெட்டு.
இது ஒரு முகவரிக்கான தேடல் , தமிழ் ஆர்வலனாக என்னை வரையறுத்துக்கொண்ட நான் , ஒரு தமிழனாக மாறுவதற்கான பயணம் .
Sunday, November 29, 2009
Saturday, November 28, 2009
நான் சென்னை நகரம்

நான் சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி
அவளோ அழகு மங்கலக்கோலத்தில்,
நானோ அறை குறை நிர்வாணத்தில்;
ஓசோன் படலத்தை உடைக்க துடிக்கும் கோபுரங்கள்,
அவை மறைத்திருக்கும் குடிசைகள் தான் என் மறுபுரங்கள்,
மெரினாவும் ஜார்ஜ் கோட்டையும் காட்டும் என் சரித்திரங்கள்,
கூவமும் அழுக்குக்குப்பமும் காட்டும் என் தரித்திரங்கள்;
குப்பைதொட்டிக்கு அருகில் கிழிந்த ஆடையுடன் பெண்,
ஸ்பென்சர் பிளாசாவுக்கு உள்ளேயும் கிழிந்த ஆடையுடன் பெண்,
அதுவோ இறைவன் விதித்த விதி,
இதுவோ நவநாகரிகத்தின் சதி

கடற்கரையை படுக்கையறையாக்கும் கலாச்சார புனிதர்கள்,
கருவறை முதல் கல்லறை வரை கழிவறையிலேயே வாழும் மனிதர்கள்;

புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமக்கும் சிறுமி,
மாஞ்சாக்கயிறு இழுக்கும் வயதில் கஞ்சா இழுக்கும் சிறுவன்;
கோவிலுக்கு அருகிலேயே விபசார விடுதிகள்,
கலவரம் என்று வந்தால் தெறிக்கும் குருதிகள்;
ஹீரோ ஆக இங்கே வந்து ஜீரோ ஆகும் அவலங்கள்,
நீரோ மன்னன் போல் எதையும் வேடிக்கை பார்க்கும் கேவலங்கள்;
கார்களிலும் டைடெல் பார்க்கிலும் பறக்கும் தமிழ்மகன்கள்,
பார்களிலும் டாஸ்மாக்கிலும் மிதக்கும் குடிமகன்கள்,
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் அழகிய தமிழ்மகள்கள்,
கற்பை விற்கும் பதுமைப்பெண்ணாய் அங்கங்கே விலைமகள்கள்;
இயந்திரம் மனிதனாகும் முன்னே இங்கு மனிதன் இயந்திரம் ஆகிறான்,
சுதந்திரம் எதுவும் இன்றி இந்த வாழ்வே நிரந்தரம் ஆகிறான்;
வாசித்துப்பார்த்தால் நான் சிங்காரச்சென்னை,
யோசித்துப்பார்த்தால் நான் மனிதப்பண்ணை,
நான் தான் சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி,
தமிழ்நாட்டின் தலை வலி...


Subscribe to:
Posts (Atom)